Thengai Sevai / தேங்காய் சேவை / coconut flavoured spring hoppers

Thengai Sevai / தேங்காய் சேவை / coconut flavoured spring hoppers

Coconut flavoured spring hoppers 

Ingredients

  • தேங்காய் துருவல் - 1/4 கப்
  • இடியாப்பம்- 5 - நன்கு உதிர்த்து கொள்ளவும்
  • பச்சை மிளகாய்-2- நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்
  • காய்ந்த மிளகாய் வற்றல்- 2
  • கடுகு- 1/4 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்
  • முந்திரி பருப்பு- 10
  • கருலேப்பில்லை- சிறிதளவு- 1 டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு - 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை
  • உப்பு- தேவையான அளவு - 1/4 டீ ஸ்பூன்

Directions

ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.

இதனுடன் கடலை பருப்பு மற்றும் முந்திரி பருப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.

பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல், பெருங் காயத்தூள் சேர்த்து கிளறவும்.

ஒரிரு நிமிடம் நன்கு வதங்கியதும் உதிர்த்த இடியாப்பம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

மிதமான சூட்டில் ஒரு 5 நிமிடங்கள் நன்கு கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.

சூடான சுவையான தேங்காய் சேவை தயார்.

LEAVE A REPLY

Login to comment