Tricolor idely

Tricolor idely

Tricolor idely

Ingredients

  • பச்சை நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீ ஸ்பூன் சீரகம்
  • 5 பாதாம் பருப்பு
  • 2 மிளகாய் வற்றல்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 5 பூண்டு பற்கள்
  • பாலக் கீரை- 1 கப்
  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு-1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
  • கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை
  • 1 கப் இட்லி மாவு
  • சிவப்பு நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீ ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 5 முந்திரிப்பருப்பு
  • 2 மிளகாய் வற்றல்
  • 1சிறிய துண்டு இஞ்சி
  • 5 பூண்டு பற்கள்
  • நறுக்கிய தக்காளி-1
  • நறுக்கிய காரட்-1
  • மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள்-1 சிட்டிகை
  • உப்பு- தேவையான அளவு -1/2 டீ ஸ்பூன்
  • 1 கப் இட்லி மாவு
  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
  • வெள்ளை நிற மாவு: 1டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கருலேப்பில்லை-1 கொத்து
  • நறுக்கிய பூண்டு-5
  • துருவிய இஞ்சி-1 டீஸ்பூன்
  • துருவிய பாதாம்-3
  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
  • 1 கப் இட்லி மாவு
  • துருவிய பிஸ்தா பருப்பு-1 டேபிள் ஸ்பூன்

Directions

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் 1/2 டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.

 5 பாதாம் பருப்பு, 2 மிளகாய் வற்றல், சிறிய துண்டு இஞ்சி சேர்த்து வதக்கவும்

 5 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்

 இதனுடன் பாலக் கீரை- 1 கப், 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்

 வதக்கிய கீரையை குளிர வைத்து அரைத்து எடுத்து 1 கப் இட்லி மாவு சேர்த்தால் பச்சை நிற மாவு தயார்.

வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் 1/2 டீ ஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.

5 முந்திரிப்பருப்பு, 2 மிளகாய் வற்றல், சிறிய துண்டு இஞ்சி, 5 பூண்டு பற்கள் சேர்த்து வதக்கவும்

 நறுக்கிய தக்காளி-1, நறுக்கிய காரட்-1 சேர்த்து வதக்கவும்

 மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, கரம் மசாலா தூள்-ஒரு சிட்டிகை, உப்பு- தேவையான அளவு சேர்த்து வதக்கவும்

வதக்கிய காரட் கலவையை குளிர வைத்து அரைத்து எடுத்து 1 கப் இட்லி மாவு சேர்த்தால் இளஞ் சிவப்பு நிற மாவு தயார்.

 ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகுஉளுந்தம் பருப்பு-1/2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம்-2 டேபிள்ஸ்பூன் சேர்க்கவும்

 கருலேப்பில்லை-ஒரு கொத்து, நறுக்கிய பூண்டு-5, துருவிய இஞ்சி-1 டீஸ்பூன், துருவிய பாதாம்,பிஸ்தா-1 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை  சேர்த்து வதக்கவும்

 வதக்கியதை 1 கப் இட்லி மாவில் சேர்த்தால் வெள்ளை நிற மாவு தயார்.

 டம்ளரில் எண்ணெய் தடவி, சிறிது துருவிய பிஸ்தா பருப்பை தூவி, ஒரு கரண்டி கீரை பச்சை நிற மாவை ஊற்றவும்

 ஒரு கரண்டி வெள்ளை நிற மாவை ஊற்றவும்

 ஒரு கரண்டி கேரட் இளஞ் சிவப்பு நிற  மாவை ஊற்றி டம்ளர்களை இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும்

 15 நிமிடத்திற்கு பிறகு இட்லி வெந்துள்ளதா என சரி பார்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்

 டம்ளர் சூடு தணிந்தபின் கத்தி உதவியுடன் வெட்டி எடுக்கவும்

LEAVE A REPLY

Login to comment