குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

Ingredients

  • குதிரை வாலி அரிசி- 3/4 cup
  • பாசிப்பருப்பு - 1/4 cup
  • உப்பு-1 pinch
  • வெல்லம் -1 cup
  • நெய்  - 2 tbsp
  • ஏலக்காய் - 2 piece
  • முந்திரிப்பருப்பு - 10 piece
  • உலர் திராட்சை -10 piece
  • தண்ணீர்  - 1/4 cup- வெல்லத்தை கரைப்பதற்கு

Directions

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி பாசிப்பருப்பை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும். குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும் வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும். நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் மிதமான சூட்டில்  பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும். மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, ஏலக்காய், உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும். சுவையான குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் தயார்..

LEAVE A REPLY

Login to comment