ராஜஸ்தானி கோர்மா ரொட்டி

ராஜஸ்தானி கோர்மா ரொட்டி

Rajestani Korma rotti 

Ingredients

 • பாசிப்பருப்பு- 1 கப்
 • கோதுமை மாவு- 2 கப்
 • மிளகாய் தூள்- 1/2 டீ ஸ்பூன்
 • மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
 • பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை
 • எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
 • ஓமம் விதைகள்- 1/4 டீ ஸ்பூன்
 • உப்பு- தேவையான அளவு - 1 டீ ஸ்பூன்
 • தண்ணீர் -1 கப்
 • கோதுமை மாவு- ரொட்டி மேல் தூவி தேய்ப்பதற்கு - 1/4 கப்
 • எண்ணெய்-தேவையான அளவு- 3 டேபிள் ஸ்பூன்

Directions

பாசி பருப்பை கர மொர என்று மிக்ஸியில் தூளாக்கி கொள்ளவும்.

பின் தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்

ஊறிய பாசிப்பருப்பை நன்கு வடிகட்டி, கோதுமை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள், ஓமம் விதைகள், உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு பிசைந்து கொள்ளவும்.

15 நிமிடத்திற்கு பிறகு சப்பாத்தி மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.

பின் சிறிது கோதுமை மாவை உருண்டை மேல் தூவி சப்பாத்தி போல் தேய்த்து எடுக்கவும்.

பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை வைத்து வேக விடவும்.

 ரொட்டியின்   மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும்  சிறிது பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.

சூடாக ரொட்டிகளை ஊறுகாய் உடன் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Login to comment