குதிரை வாலி அரிசி கறுப்பு உளுந்து தோசை

குதிரை வாலி அரிசி கறுப்பு உளுந்து தோசை

Horsegram Black urad dal Dosa 

Ingredients

  • குதிரை வாலி அரிசி- 1 கப்
  • கறுப்பு உளுந்து  - 1/2 கப்
  • பச்சை அரிசி- 1/4 கப்
  • புழுங்கல் அரிசி - 1/4 கப்
  • உப்பு- தேவையான அளவு - 1 டேபிள் ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு - 3 டேபிள் ஸ்பூன்

Directions

குதிரை வாலி அரிசி, கறுப்பு உளுந்து, பச்சை அரிசி, புழுங்கல் அரிசி இவற்றை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின்னர் நன்கு கழுவி தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது சிறிதாக நன்றாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவை 8 மணி நேரத்திற்கு பின் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்

தோசை கல் சூடான பின் ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசைகளாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் தெளித்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

கெட்டியான தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி யுடன் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Login to comment