அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்

அவல் வறட்டியது - அவல் விளையிச்சது - இனிப்பு அவல்

Aval varattiyathu

Ingredients

 • ப்ரௌன் அவல் - 2 கப்
 • வெல்லம்- 1 கப்- துருவியது
 • துருவிய தேங்காய்- 1/2 கப்
 • ஏலக்காய் பொடி- 1/4 டீ ஸ்பூன்
 • சுக்கு பொடி - 1/4 டீ ஸ்பூன்
 • பொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்
 • நெய்- 2 டீ ஸ்பூன்
 • தண்ணீர் - 1/4 கப்
 • பாதாம் பருப்பு- 4- துருவிக் கொள்ளவும்
 • பிஸ்தா- 4- துருவிக் கொள்ளவும்
 • முந்திரி பருப்பு- 6

Directions

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் உருக்கவும்.

நன்கு உருகியதும் வடிகட்டி மீண்டும் சூடாக்கி பாகு பததிற்கு காய்ச்சவும்.

பாகு பததிற்கு(சிறிது எடுத்து கையில் தொட்டு பார்க்கும் போது நன்கு ஒட்ட வேண்டும்) வந்ததும், துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அவல், ஏலக்காய் பொடி, சுக்கு பொடி சேர்த்து நன்கு சுருள கிளறவும்.

நன்கு சுருண்டதும், அடுப்பில் இருந்து இறக்கவும்.

பின்பு இன்னொரு பாத்திரத்தில், சிறிது நெய் சேர்த்து சூடான பின் பொட்டு கடலை,

பாதாம் பருப்பு, பிஸ்தா, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து சமைத்த அவலுடன் சேர்க்கவும்.

சூடாக வாழைப்பழத் துண்டுகளுடன் பரிமாறலாம்.

LEAVE A REPLY

Login to comment