மட்டன் சூப் / வெள்ளாட்டக்கறி சூப்/ mutton soup

மட்டன் சூப் / வெள்ளாட்டக்கறி சூப்/ mutton soup

Mutton soup 

Ingredients

  • வெள்ளாட்டக்கறி - 100 கிராம் 
  • சின்ன வெங்காயம் - 8
  • தக்காளி  - 1
  • கருலேப்பில்லை- 1 கொத்து
  • கொத்த மல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  • கரம் மசாலா தூள்- 1/8 டீ ஸ்பூன்
  • மிளகு- 1/8 டீ ஸ்பூன்
  • சீரகம்- 1/8 டீ ஸ்பூன்
  • மிளகு சீரகத் தூள் - 1/4 டீ ஸ்பூன்
  • உப்பு- தேவையான அளவு - 1/2 டீ ஸ்பூன்
  • பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை
  • மஞ்சள் தூள்- 1/2 டீ ஸ்பூன்
  • நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  • தண்ணீர்- 1 1/2 கப்

Directions

வெள்ளாட்டக்கறியை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு கருலேப்பில்லை, மிளகு சீரகத் தூள், பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

வெள்ளாட்டக்கறி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு தண்ணீர் சேர்த்து  கிளறி குக்கரை மூடி 10 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கியதும்  சூடான சாதத்துடன் பரிமாறலாம். அல்லது சூப் பாக அருந்தலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கு கொடுக்கும் போது  மிளகு சீரகத் தூள் குறைவாகவோ சேர்க்கவும் அல்லது சேர்க்காமல் கொடுக்கவும்.

LEAVE A REPLY

Login to comment