கொள்ளு வெங்காயத்தாள் பொறியல்/ Horsegram spring onion fry

கொள்ளு வெங்காயத்தாள் பொறியல்/ Horsegram spring onion fry

 Horsegram spring onion fry 

Ingredients

 • கொள்ளு  - 100 கிராம்
 • பெரிய வெங்காயம்-1/2 - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
 • பூண்டுபற்கள்  -5 - பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
 • வெங்காயத்தாள்- பொடியாக நறுக்கியது- 2 டேபிள் ஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் வற்றல்-2
 • கொத்தமல்லி இலை- 1 டேபிள் ஸ்பூன்
 • கருலேப்பில்லை- 1 டேபிள் ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
 • மிளகாய் தூள்- 1/4 டீ ஸ்பூன்
 • கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை
 • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை
 • உப்பு- தேவையான அளவு -1/4 டீ ஸ்பூன்
 • எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
 • சீரகம்-1/4 டீ ஸ்பூன்

Directions

ஒரு கடாயை சூடாக்கி அதில் கொள்ளு சேர்க்கவும்

கொள்ளு மனம் வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்

பின்பு வறுத்த கொள்ளு மற்றும் ஒரு கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கியதும் கொள்ளு வேக வைத்த தண்ணீரை வடிகட்டி எடுத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் சேர்க்கவும்.

பின்பு காய்ந்த மிளகாய் வற்றல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் நறுக்கிய பூண்டுபற்கள், கருலேப்பில்லை  மற்றும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும்.

பின்பு வேகவைத்த கொள்ளு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், கரம் மசாலா தூள்  மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.

ஒரு 10 நிமிடம் கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.

10 நிமிடத்திற்கு பிறகு நன்கு கிளறி கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

குறிப்பு: கொள்ளு வேக வைத்த தண்ணீரை வைத்து கொள்ளு ரசம் செய்யலாம்.

LEAVE A REPLY

Login to comment