முருங்கை இலை சூப் / Drumstick leaves soup

முருங்கை இலை சூப் / Drumstick leaves soup

Drumstick leaves soup 

Ingredients

 • முருங்கை இலை- 1 கப்
 • தண்ணீர்-2 கப்
 • இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன்
 • பூண்டு விழுது- - 1 டீ ஸ்பூன்
 • சிறிய வெங்காயம்-10- பொடியாக நறுக்கி கொள்ளவும்
 • தக்காளி-1 - பொடியாக நறுக்கி கொள்ளவும்
 • சீரகம்-1/2 டீ ஸ்பூன்
 • மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
 • பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
 • மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்
 • நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்
 • உப்பு-தேவையான அளவு-1/4 டீ ஸ்பூன்

Directions

முருங்கை இலை களை நன்றாக கழுவி எடுக்கவும்

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் பொடித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் சேர்க்கவும்

பின்பு முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

விசில் அடங்கியதும் சூடான முருங்கை இலை சூப்பை பரிமாறலாம்

LEAVE A REPLY

Login to comment